காணி வாங்க

BAULAND / GRUNDSÜCK சுவிற்சர்லாந்தில் காணிகள் எவ்வகைப்படும்?

பெரும் பிரிவுகள் 4 வகையாகப் பிரிக்கப்படும். இவைகளைத் தவிர பல சிறிய பிரிவுகளும் உண்டு. அவை இவற்றிற்குள் உள்ளடக்கப்படுகின்றது.

BAULAND

  • தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவதற்கு இவை உபயோகிக்கப்படும்.

GEWRBELAND

  • அலுவலகங்கள் தொழிற்சாலைகள் விடுதிகள் உணவு விடுதிகள் போன்றவற்றைக்கட்ட உதவும். அவற்றினுள் சட்ட வரையறைக்கு உட்பட்டு சில வீடுகளையும் கட்டலாம்.

INDUSTRIELAND

  • இதற்குள் தொழிற்சாலைகளை மட்டுமே கட்ட முடியும் இதற்குள்ளும் சட்ட விதிகளிற்குட்பட்டு ஒரு சில வீடுகளைக் கட்டமுடியும்.

LANDWIRSCHAFT

  • இக்காணிக்குள் வெறும் பயிர்களைத் தவிர மந்தைகளையும் கூடாரம் இல்லாமல் வளர்ப்பதற்கும் மட்டுமே உதவும். இதற்குள் வாகன தரிப்பிடத்தைக்கூட அமைக்க முடியாது

வீடு கட்டும் காணிகள் (BAULAND) எத்தனை வகைப்படும்?

  • W2,
  • W3,
  • W6,
  • ZENTRUMZONE என பல வகைப்படும்.

இவைக்குள்ளும் பல சிறிய வேறுபட்ட சட்டதிட்டத்திற்குட்பட்ட பிரிவுகள் உண்டு.

W2

இக்காணிக்குள் ஒரு மாடிக்கு மேல் வீடு கட்ட சட்டம் இடம் தராது. இருந்தும் அயலவரின் சம்மதத்துடனும் அந்த கிராம வீடமைப்பு திணைக்கள அனுமதியுடனும் மேலும் ஒன்று அல்லது இரண்டு மாடிகள் கட்ட முடியும் அப்படிக் கட்டுவது ஓர் விதி விலக்கான அனுமதியேயாகும்.

W3

இக்காணிக்குள் 2 மாடிக்கு மேல் வீடு கட்ட சட்டம் இடம் தராது. இருந்தும் அயலவரின் சம்மதத்துடனும் அந்த கிராம வீடமைப்பு திணைக்கள அனுமதியுடனும் மேலும் ஒன்று அல்லது இரண்டு மாடிகள் கட்ட முடியும் அப்படிக் கட்டுவது ஓர் விதி விலக்கான அனுமதியேயாகும்.

W6

இதற்குள் மாடிவீடு மாத்திரமே கட்ட முடியும் அதுவும் பல இடங்களில் தரைப் பகுதியில் அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களிற்கு அசௌகரியம் இல்லாதவாறு ஏதாவது சாதாரண தொழில் நிலையம் அமைக்கவே அனுமதிக்கப்படும்.

ZENTRUM ZONE

இந்தக் காணிக்குள் அடுக்குமாடி வீட்டுடன் இணைந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அனுமதியுடனும் அந்த கிராம சுற்றத்தின் சட்டத்திற்குட்பட்டும் செய்யலாம்.

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply