வீட்டுக்காப்புறுதி ( HAUSERATVERSICHERUNG )

  • SWISS நாட்டில் வீட்டுக்காப்புறுதி என்பது HAUSERAT,  PRIVATHAFTPFLICHT என இருவகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • HAUSERAT காப்புறுதியைச் செய்வதால் உங்கள் சொந்தப் பொருட்கள் இடி, மின்னல், மழை, நெருப்பு, மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக சேதத்திற்கு உள்ளானாலும்.
  • இதைத் தவிர உங்கள் கைத்தொலைபேசி, துவிச்சக்கரவண்டி, உடற்பயிற்சி இயந்திரங்கள், போன்றவை உள்ளடங்கலாக நீங்களே சேதப்படுத்தினாலும் மற்றும் பயணத்தின்போது உங்கள் உடமைகள் தொலைய நேர்ந்தாலும் நட்டஈடு வழங்கும் காப்புறுதியே இதுவாகும்.
  • PRIVATHAFTPFLICHT எனப்படுவது பிறர் பொருட்களையோ அல்லது வாகனங்களையோ சொத்துக்களையோ நீங்கள் சேதம் செய்யும் பட்சத்தில் அதற்கான நட்டஈட்டை வழங்கும் காப்புறுதியே இதுவாகும்
hausratversicherung-studenten

வீட்டுக்காப்புறுதி என்றால் என்ன?

வீட்டில் உள்ள பொருட்கள் இயற்கை அனர்த்தத்தாலோ அல்லது மின்சார ஒழுக்கினாலோ சேதத்திக்கு உள்ளானாலோ மற்றும் உங்கள் சில பொருட்கள் உங்கள் தவறினால் தொலைந்தாலோ சேதப்படுத்தப்பட்டாலோ அதற்கான பெறுமதியை நட்ட ஈடாகப் பெற செய்யப்படும் காப்புறுதியாகும்.

வீட்டுக்காப்புறுதியின் தன்மைகள் சொந்த வீட்டிற்கும் வாடகை வீட்டிற்கும் வேறுபடுமா?

இல்லை.

தனிநபரிற்கும் குடும்பத்திற்குமிடையில் வீட்டுக்காப்புறுதியின் பெறுமதிகள் எந்த அடிப்படையில் வேறுபடுகின்றது?

அவரவர் ஒப்பந்தம்செய்யும் பெறுமதிக்கேற்றவாறுதான் கட்டண வரம்பு நிர்ணயிக்கப்படும்.

வீட்டுக்காப்புறுதி செய்பவரிற்கு இக்காப்புறுதி எவ்வாறு எச்சந்தர்ப்பங்களில் வேறுபடுகின்றது?

காப்புறுதித் தொகை, காப்புறுதிச் சலுகை, நட்ட ஈட்டில் காப்புறுதியேற்றவர் ஏற்கும் முற்கட்டணம், காப்புறுதி நிறுவனத்தின் வேறுபாடுகள், காப்புறுதி செய்யப்படும் காலம், காப்புறுதி செய்யப்படும் கட்டடம் போன்று பல விடயங்களினால் வேறுபடுகின்றது.

தனிநபர் ஒருவர் தனது வீட்டுக்காப்புறுதியை எவ்வளவு பெறுமதிக்குச் செய்தல் வேண்டும்?

காப்பீட்டாளர் வைத்திருக்கும் பொருட்களின் பெறுமதி மற்றும் அவரது அன்றாட செயற்பாடுகளின் பெறுமதி அத்தோடு அவர் வசிக்கும் இடத்தின் தன்மை, சுற்றம் என்பனவற்றைக் கருத்தில்கொண்டு அதிகபட்சம் குறைந்தபட்சம் எனத் தொகைகளை வரையறை செய்யலாம்.

mann und frau im ehebett

ஒரு குடும்பத்தில் வயதுவந்த பிள்ளைகள் மற்றும் வயதானவர்கள் வசிப்பின் அவர்களிற்கான பாதுகாப்பை ஒரே காப்புறுதி ஒப்பந்தத்திற்குள் செய்துகொள்ளலாமா?

முதலில் ஒரு குடும்பத்தில் பெற்றோரோடு வசிக்கும் வளர்ந்த அதாவது 20 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் வசிப்பின் அவர்கள் தமது PRIVATHAFTPFLICHT எனப்படும் பிரத்தியேகக் காப்புறுதியை அவர்கள் 71.00 CHF பெறுமதியில் பிரத்தியேகமாகச் செய்தல் வேண்டும்.

ஆனால் இதுவும் அவரவர் காப்பீடு செய்துள்ள காப்பீட்டு நிறுவனத்தின் சட்டதிட்டங்கிளில் மாறுபடும். உதாரணத்திற்கு சில காப்புறுதி நிறுவனங்களில் பிள்ளைகள் ஒன்றாக அவர்களது பெற்றோரோடு வாழும் காலம்வரை பெற்றோர்களின் காப்புறுதியோடு குடும்பம் என்ற கோர்வையினுள் உள்ளடக்கப்படும்.

அதேவேளையில் அப்பிள்ளைகள் திருமணம் புரிந்திருப்பின் அவர்கள் கட்டாயம் பிரத்தியேகக் காப்புறுதியான PRIVATHAFTPFLICHT எனப்படும் காப்புறுதியை பிரத்தியேகமாகச் செய்துகொள்ளல் அவசியமாகின்றது. அதேபோல குடும்ப உறவுகளிற்கு அப்பாற்பட்டு பெற்றோரின் உறவினர்கள் இவ்வீட்டில் வாழ்தால் அவர்களும் அந்த பிரத்தியேகக் காப்புறுதியை செய்வது அவசியமாகும்.

ஓர் குடும்பம் வீட்டுக்காப்புறுதியை எவ்வளவு பெறுமதிக்குச் செய்தல் வேண்டும்?

குடும்பத்தில் கணவன், மனைவி மாத்திரம் ஒரே வீட்டில் 50,000 CHF போதுமானது.அத்தோடு பிரத்தியேகக்காப்புறுதியான PRIVATHAFTPFLICHT காப்புறுதியை 5 தொடக்கம் 10 மில்லியோனிற்குச் செய்யலாம். மற்றும் இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் வசிப்பின் அவர்கள் தாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களின் பெறுமதியைப் பொறுத்து பெறுமதிளைக் கூட்டிக்கொள்ளலாம்.

இந்தக் காப்புறுதி நிறுவனம் வீட்டில் அல்லது வெளியே ஏற்படும் சேதங்களிற்கு எவ்வளது நட்ட ஈடாகத் தரும்?

பிறர் பொருட்களின் சேதத்திற்கு அதிகபட்சம் 5 தொடக்கம் 10 மில்லியோன், மற்றும் தமது பொருட்களிற்கு அதிகபட்சம் 2000.00 CHF பெறுமதியாகும்.

413_hausratversicherung

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply