மருத்துவக்காப்புறுதி (SWISS) KRANKENKASSE VERSICHERUNG

1. நீங்கள் விரும்பும் KRANKENKASSE ஐ தெரிவு செய்யலாம்

 • கிறங்கன்காசேயில் பிரச்சனையா?
 • குறைந்த கட்டணத்திற்கு மாற்றவேண்டுமா?
 • புதிதாக வருபவர்களிற்கு தரமான KRANKENKASSE செய்யவேண்டுமா?
 • ஆயுர்வேதம், பல் கண்ணாடி, பிற மாநிலத்தில் வைத்தியம், உடற்பயிற்சி போன்று அனைத்துச் சலுகைகளையும் உள்ளடக்கிய கிறங்கன்காசே
 • உங்கள் மாநிலத்திற்கு எந்தக் KRANKENKASSE தரமானது எனத் தேர்வுசெய்து தரமான காப்புறுதியை உங்களிற்கு வழங்கக் காத்திருக்கின்றோம்.
 • எம்மை அழையுங்கள்
 • குறைந்த கட்டணத்தில் அனைத்துச் சலுகைகளுடன் நிறைந்த சேவை
 • எமது அன்றாட வாழ்வில் அத்தியாவசியமான காப்புறுதி இது.
 • இதை குறைந்த கட்டணத்தில் அதிக சலுகையோடு செய்வது ஆலோசனைக்கு உரியது.
 • இக்காப்புறுதியை வசிக்கும் இடம் மற்றும் வயது உடல் ஆரோக்கியம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இதனுடைய ஒப்பந்தத்தை செய்யவேண்டும்.

2. ஒருவர் சுவிற்சர்லாந்து நாட்டிற்குள் குடியேறுவதாக இருந்தால் கட்டாயமாக இந்த மருத்துவக்கப்புறுதியைச் செய்திருத்தல் அவசியமா?

 • ஆம். இந்த மருத்துவக்காப்புறுதியைச் செய்துகொள்ளல் அவசியமானது.
 • அதை இங்கே வசிக்க விரும்புகின்றவர் நாட்டிற்குள் வந்து 3 மாதத்திற்குள் செய்துவிடல் விரும்பத்தக்கது.
 • இவர் 3 மாதகாலத்திற்குள் இக்காப்புறுதிளைச் செய்துகொண்டாலும் எந்தக் காப்புறுதி நிறுவனத்தோடு ஓப்பந்தம் செய்கின்றாரோ அந்தக் காப்புறுதிக்கு கட்டாயக் காப்புறுதியின் கட்டணத்தைச் வந்த திகதியிலிருந்து செலுத்துதல் அவசியமாகின்றது.

3.மருத்துவக்கப்புறுதியின் பிரிவுகள் எவை?

 • இரண்டு பிரிவுகள் உள்ளன.அவையாவன
  1. GRUNDVERSICHERUNG
  2. SUZATZVERSICHERUNG
 • இந்தக்  GRUNDVERSICHERUNG இலும் இரண்டு பிரிவுகள் உள்ளன.
  அவையாவன

  • SOZIALEKRANKENVERSICHERUNG
   • Obligatorische Krankenpflegeversicherung (OKP)
   • Freiwillige Taggeldversicherung
  • VERSICHERTE RISIKEN (LEISTUNGSÜBERNEHME)
   • Krankheit
   • Unfall
   • Mutterschaft

4. மருத்துவக் காப்புறுதியைச் செய்த ஒருவர் வைத்தியரிடம் சென்றால் வைத்தியரிற்கு கட்டவேண்டிய கட்டணத்தை முழுமையாக கட்டவேண்டுமா?

 • அவரவர் ஒப்பந்தத்திற்கேற்ப FRANCHISE எனப்படும் முற்பொறுப்புக் கட்டணம் வித்தியாசப்படுகின்றது.
 • ஒரு வருடத்தில் அந்த முற்பொறுப்புக் கட்டணத்திற்குள் (FRANCHISE) வைத்தியச் செலவுகள் ஏற்பட்டால் காப்புறுதி எடுத்துக்கொண்டவரே கட்டணத்தைக் கட்டுதல் வேண்டும்.
 • அதற்கு மேல் வருகின்ற வைத்தியச் செலவில் 10% கட்டணத்தை மாத்திரமே கட்டவேண்டும்.
 • ஆனால் ஒரு வருடத்திற்குள் 00 CHF களிற்கு மேல் வைத்தியச் செலவை ஏற்படுத்தினால் அந்நபர் பின்னர் எந்த கட்டணமும் கட்டத் தேவையில்லை.
 • இருந்தும் அவரவர் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்குள் உட்டபட்டுத்தான் வைத்தியச் செலவோ விபத்துச் செலவோ ஏற்கப்படும்.

5. FRANCHISE எனப்படும் முற்பொறுப்புக் கட்டணம் எவ்விதமாக அமைகின்றது?

இக் கட்டணங்கள் 300.00 ஊர்கு இலிருந்து 2500.00 ஊர்கு வரையும் உள்ளது.
காப்புறுதி செய்பவர்களின் வயதெல்லையை வைத்து கட்டணங்கள் இரண்டு பிரிவுகளையுடையது.
 • குழந்தைளிற்கானது (KINDER) ( 1-18 வயதிற்கு உட்பட்டது)
 • பெரியவர்கள் (ERWACHSENE) (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்)
18 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு FRANCHISE கட்டத்தேவையில்லை. விரும்புகின்றவர்கள் கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டவாறு ஒப்பந்தம் செய்து மாதாந்தக் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

KINDER

 • ORDERNLICH           =   CHF 00.00
 • WAHLFRANCHISE =   CHF 100.00/ 200.00/ 300.00/ 400.00/ 500.00/ 600.00
  (3500.00 CHF களிற்கு மேல் மருத்துவச் செலtpல் எந்தவிதமான கட்டணங்கழும் கட்டத்தேவையில்லை)

ERWACSENE

 • ORDERNLICH           =   CHF 300.00
 • WAHLFRANCHISE =   CHF 00.00/ 1000.00/ 1500.00/ 2000.00/ 2500.00/ 3000.00
  (இவர்கள் CHF 7000.00 இற்கு மேல் வைத்தியக் கட்டணம் எதுவும் கட்டத் தேவையில்லை)

6. UNFALL எனப்படும் விபத்துக் காப்புறுதியை யார்?
எப்போது?
எதற்காகச் செய்யுகொள்ளல் அவசியம்?
இக்காப்புறுதியைச் செய்வதால் எப்படிப்பட்ட நன்மைகளை எவ்வளவு காலத்திற்குப் பெறலாம்?

 • சுவிற்சர்லாந்தில் வாழும் ஒருவர் சுவிற்சர்லாந்தில் தொழில் புரிந்தாலோ அல்லது சுவிற்சர்லாந்து தவிர்ந்த பிற நாடுகளில் தொழில் புரிந்தாலோ மற்றும் தொழில் இல்லாது சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலோ கட்டாயம் செய்யப்படவேண்டிய காப்புறுதியாகும்.
 • இருந்தபோதிலும் சுவிற்சர்லாந்தில் தொழில் புரிபவராயின் அவரிற்கான காப்புறுதியை அவர் தொழில்புரியும் நிறுவன உரிமையாளரே செய்துகொள்வார். ஆனால் இக்கட்டணம் தொழிலாழியின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் கழிக்கப்படும்.
 • (KINDER)தொழில் செய்யாத குழந்தைகள் ,(STUDENTSEN)மாணவர்கள் ,(SELBSTÄNDIGERWERBENDE)சொந்தத் தொழில் புரிபவர்கள் ,(RENTER)படிச்சம்பளம் அல்லது ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் இக் காப்புறுதியைச் செய்து வைத்திருத்தல் அவசியம்.
 • தொழில் செய்பவர் தனது தொழில் புரியும் நிலையத்திலேயோ அல்லது தவிர்ந்த பிற இடங்களிலேயோ விபத்திற்குள்ளானால் அவரிற்கான வைத்திய செலவை இந்தக் காப்புறுதி பொறுப்பேற்கும்.

7. பேர்ன் மாநிலத்தில் எதற்காக மருத்துவக்காப்புறுதிக் கட்டணம் அதிகமாக அறவிடப்படுகின்றது ?

 • சுவிற்சர்லாந்தில் அதிகமான தனியார் வைத்தியசாலைகள் பேர்ன் மாநிலத்தில்தான் உள்ளன.
 • ஆதலால் அதிகமாக நோயாளிகளும் அங்கே வைத்திய உதவியைப் பெறுகின்றன.
 • அதேவேளையில் தனியார் வைத்தியசாலையில் அதிக கட்டணம் அறவிடப்படுகின்றது. எனவேதான் இந்த மாநிலத்தில் அதிக மருத்துவக்காப்புறுதிக் கட்டணம் அறவிடப்படுகின்றது.

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply