பயணக்காப்புறுதி (REISEVERSICHERUNG)

 • விசா மறுக்கப்பட்டால் கட்டிய கட்டணத்தை விசா மறுக்கப்பட்ட காரணத்தைச் சரிவரச் சமர்பித்ததன் பின்னர், மிகச்சிறிய கழிவுடன் 3 தொடக்கம் 4 வாரத்தினுள் திருப்பிக் கொடுக்கப்படும்.
 • சுவிற்சர்லாந்தில் 80 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே இக்காப்புறுதியைச் செய்யமுடியும்.
 • இக்காப்புறுதியில் 50,000 CHF கள் பெறுமதி அடங்குகின்றது.
 • SOS SCHUTZ இற்குள் 000.- CHF கள் பெறுமதி அடங்குகின்றது.
 • SOS SCHUTZ செய்ய விரும்புகின்றவர் பிரத்தியேகமாக குறைந்தபட்சம் 92 நாட்களிற்கு – CHF அதிகமாகக் கட்டவேண்டும்.
 • 184 நாட்கள் விசா பெறுபவர் கட்டாயம் 70.- CHF குகள் கட்டவேண்டும்.
 • SOS SCHUTZ எனப்படும் காப்புறுதி விசா எடுப்பதற்கு அத்தியவசியமானது அல்ல.  ஆனால் இது உங்கள் பாதுகாப்பிற்காக மட்டுமே செய்யப்படுகின்றது.
 • சுவிற்சர்லாந்திற்கு வர விரும்புகின்றவர் ஐரோப்பிய நாடு தழுவலான செங்கன் எனப்படும் ஐரோப்பா முழுவதும் செல்லக்கூடிய விசாவைத்தான் பெற முடியும்.
 • ஆதலால் காப்புறுதியின் தொகை 50,000.- CHF பெறுமதியுள்ள கட்டணத்தைக் கட்டவேண்டும்.
 • 15 நாட்களிற்கு 50,000.- CHF பெறுமதியுடைய காப்புறுதியைச் செய்ய 168.- CHF கட்டவேண்டும்.
 • 31 நாட்களிற்கு 50,000.- CHF பெறுமதியுடைய காப்புறுதியைச் செய்ய 278.- CHF கட்டவேண்டும்.
 • 62 நாட்களிற்கு 50,000.- CHF பெறுமதியுடைய காப்புறுதியைச் செய்ய 468.- CHF கட்டவேண்டும்
 • 92 நாட்களிற்கு 50,000.- CHF பெறுமதியுடைய காப்புறுதியைச் செய்ய 624.- CHF கட்டவேண்டும்.
 • 184 நாட்களிற்கு 50,000.- CHF பெறுமதியுடைய காப்புறுதியைச் செய்ய 1188.- CHF கட்டவேண்டும்.
erv_veranstaltungen_header
 • இக்காப்புறுதியானது முழு ஐரோப்பாவிற்கும் செல்லுப்படியாகும்.
 • இக்காப்புறுதியானது சுவிற்சர்லாந்திற்குள் வந்து பின்னர் மற்றய நாடுகளிற்குச் சென்றால் மட்டுமே மற்றய நாட்டில் செல்லுபடியாகும்.
 • சுவிற்சர்லாந்திற்குள் வந்ததன் பிற்பாடு ஏற்படும் சுகயீனம் மற்றும் விபத்திற்கு மட்டுமே இது செல்லுபடியாகும்.
 • முன்கூட்டியே உள்ள நோய்களிற்கோ அல்லது அதனைப் பரிசோதிக்கவோ இக்காப்புறுதி எந்தவிதமான கட்டணத்தையும் பொறுப்பேற்காது.
 • காப்புறுதி செய்யப்படுபவர் ஒரு வயதிலிருந்து 60 வயதிற்கு இடைப்பட்டவராக இருப்பின் அவர் ஐரோப்பாவிற்குள் ஏதாவது சுகயீனத்தாலோ அல்லது விபத்தினாலோ வைத்திய உதவியைப் பெற்றால் முதல் – CHF களை அந்நபர் அல்லது சுவிற்சர்லாந்திற்குள் இவரை அழைத்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
 • இதேபோல 60 வயதிற்கும் 80 வயதிற்கும் இடைப்பட்டவராக இருப்பின் 500 CHF களை தாமே செலுத்தவேண்டும்.
 • காப்புறுதி செய்யப்படுபவர் குறிப்பிட்ட திகதிக்குள் விசா எடுக்க முடியாதுபோனால் கட்டாயமாக காப்புறுதி நிறுவனத்திற்கு அக்குறித்த நாட்களிற்குள் அறிவித்தல்வேண்டும்.
 • விசா நிராகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 6 மாதத்திற்குள் தமது கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் கட்டணம் மீளப்பெறமுடியாது.
Vorteile-Reiseversicherung
JAFFNA
There is also a VFS
office at 89,
Brown Road,
Jaffna.
குறிப்பு:-
இலங்கையில் விசா உதவிக்காகவோ அல்லது விமானப்பயணச்சீட்டு எடுப்பதற்கோ எமது இலங்கை முகவரோடு தொடர்புகொள்ளலாம்.
ARIF           :      077 86 02 636
MOORTHY   :      077 67 36 083
NITHTHI     :       077 75 97 667
COLOMBO
Embassy of Switzerland
63, Srimath R.G. Senanayake Mawatha (Gregory’s Road)
Colombo 7
Sri Lanka
Phone : +94 11 269 51 17 ,  +41 58 4 62 18 51
Fax : +94 11 269 51 76 , +41 58 462 18 54
EMAIL:-  col.vertretung@eda.admin.ch
WEB:-   https://www.eda.admin.ch/colombo
POSTEL ADDRESS
Embassy of Switzerland
P.O. Box 342
Colombo
Sri Lanka

முக்கிய கவனத்திற்கு


அவசர தேவையால் உடனடியாகக் காப்புறுதி செய்ய விரும்புகின்றவர்கள் எமது உதவியோடு கட்டணத்தை உங்கள் வங்கி அட்டையின் ஊடாகச் செலுத்தி காப்புறுதியை உடனடியாகச் செய்துகொள்ளலாம்.

image4
image3

SWISS விசா பெற தூதரகத்திற்குக் கொடுக்கவேண்டிய ஆவணங்கள் அல்லது பத்திரங்கள்

வெளிநாட்டிற்கு வருபவர் கொடுக்கவேண்டிய பத்திரங்கள்

 • கடவுச்சீட்டு.
 • அடையாள அட்டை.
 • பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்.
 • வங்கிக் கணக்கு விபரம்.
 • சொத்து விபரம்.
 • தொழில் புரிபவராக இருந்தால் அலுவலகத்திலிருந்து ஓர் விடுமுறைக் கடிதம்.
 • சொந்தத் தொழில்புரிபவராக இருந்தால் நிறுவனகத்தின் ஆவணம்
 • மேலும் உங்கள் வயது அத்தோடு நீங்கள் முன்னர் ஏதாவது நாட்டிற்கு விசாவிற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டால் அதன் அடிப்படையில் மேலும் ஏதாவது ஆவணங்கள் கோரப்படலாம்.

சுவிற்சர்லாந்து நாட்டிலிருந்து விருந்தாளியை அழைப்போர் அனுப்பவேண்டிய பத்திரங்கள்

 • கடவுச்சீட்டுப் பிரதி
 • அடையாள அட்டை பிரதி
 • கடைசி 3 மாத சம்பளப் பற்றுச்சீட்டுப் பிரதி
 • சும்பளம் வங்கிக்கு வந்ததற்கான அத்தாட்சியாக கடைசி 3 மாத வங்கிக் கணக்கு விபரம்
 • சொந்தத் தொழில்புரிபவராக இருந்தால் நிறுவனகத்தின் ஆவணம்
 • வருபவர் தங்கும் இடத்தின் ஒப்பந்தம்
 • வருபவரிற்கான மருத்துவக்காப்புறுதி

( REISEVERSICHERUNG) ஒப்பந்தம்

 • வருவதற்கான காரணத்துடனும் வருபவரை திருப்பி அனுப்புவதற்கு நான் பொறுப்பேற்கின்றேன் என்ற உத்தரவாதத்துடன் அடக்கப்பட்ட கடிதம்.
 • வருபவர் ஏதாவது கொண்டாட்டங்களிற்காக இருந்தால் அதன் அழைப்பிதழையும் இணைக்கவும்.
 • வருபவர் சுகயீனமுற்ற ஒருவரைப் பார்க்க வருகின்றார் என்றால் முடிந்தவரை சுகயீனமுற்றவரின் வைத்தியரிடமிருந்து ஓர் கடிதம் அனுப்புதல் மிகநன்று.
 • சுவிற்சர்லாந்திற்கு விருந்தாளியை அழைப்பவர் SWISS பிரஐயாக இருப்பின் அவர் பிரத்தியேகமான FAMILIENBESTÄTIGUNG எனப்படும் அத்தாட்சிப் பத்திரத்தை அனுப்பவேண்டியது அவசியம்.
 • சுவிற்சர்லாந்தில் திருமணமானவராகவிருப்பின் தமது FAMILIENBUCH எனப்படும் குடும்பத் தகவலற் புத்தகத்தையும் அனுப்பவேண்டும்.
 • சவிற்சர்லாந்து தவிர்ந்த பிற நாட்டில் திருமணமானவராகவிருப்பின் அவரது திருமண அத்தாட்சிப்பத்திரத்தை அனுப்புதல் வேண்டும்.
img16

குறிப்பு

இலங்கையில் விசா உதவிக்காகவோ அல்லது விமானப்பயணச்சீட்டு எடுப்பதற்கோ எமது இலங்கை முகவரோடு தொடர்புகொள்ளலாம்.

image1
image2

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

அவசர மருத்துவப் போக்குவரத்து SOS SCHUTZ

SOS SCHUTZ என்றால் என்ன?

வெளி நாட்டிற்கு வருகின்ற ஒருவரிற்கு ஏதாவது நோய் அல்லது விபத்து, இறப்பு ஏற்படும்பட்சத்தில் அந்நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவோ, அவரது நாட்டிற்கு எடுத்துச் செல்லவோ வானூர்தி, விமானம், அவசர மருத்துவ உதவி வாகனம் அதாவது கெலிகொப்ரர், பிலைட் அம்புலனல் போண்றவற்றின் உதவியை 250.000.00 CHF பெறுமதிக்குள் பெற்றுக்கொள்ளச் செய்யப்படும் காப்புறுதியே இதுவாகும்.

SOS SCHUTZ காப்புறுதியைச் செய்வது பற்றிய SHELVAZUG GmbH நிறுவனத்தின் கருத்து என்ன?

 • SOS SCHUTZ  காப்புறுதிக்குக் கட்டப்படும் தொகை வெறும் 35.00 பிராங்குகள் மட்டுமே.   ஆனால் விபத்துக்கள் என்பது அனைவரிற்கும் அடிக்கடி ஏற்படுவதும் இல்லை.
 • அதுவும் இந்த வெளிநாட்டு வீதிச் சட்டங்கள் இறுக்கமான நிலையில் உள்ளதால் அந்த விபத்துக்கள் மிகவும் அரிதுதான்.
 • இருப்பினும் விபத்து என்பது ஏற்பட்டால் அதுவும் பெரிதாக ஏற்படும்போது மிகப் பெரிய தொகையை கட்டவேண்டி ஏற்படும்.
 • அதைவிட நாம் வருபவரிற்காக எவ்வளவோ செலவு செய்கின்றோம் அதில் இந்தச் சொற்ப செலவு பெரிதல்ல.
 • ஏதாவது விபத்து ஏற்பட்டால் பெரிய நன்மை வருபவரைவிட அழைப்பவரிற்கே.
 • விபத்து ஏற்படாவிட்டால் ஓர் சிறிய செலவு மட்டுமே  விரையமாகின்றது.
 • எனவே இந்தக் காப்புறுதியை அனைவரும் செய்துகொள்ளல் ஒர் ஆரோக்கியமான அறிவுறுத்தலாகக் கருதுகின்றோம்.

Leave a Reply