கடன் காப்புறுதி ( KREDITVERSICHERUNG )

கடன் காப்புறுதிக்காக பிரத்தியேகமாக ஏதாவது கட்டணங்கள் கட்ட வேண்டுமா?

 • ஆம். கடன் பெறும் ஒருவர் ஒப்பந்தம் செய்து கொண்ட மாதாந்தக் கட்டணத்தை விட, காப்புறுதிக்காக கட்டும் காலம் மற்றும் கடன் தொகை என்பதைப் பொறுத்து, இக்காப்புறுதிக்காக பிரத்தியேகமான கட்டணத்தைக் கட்டவேண்டும்.

கடன்பெறும் ஒருவர் கடன் காப்புறுதியைக் கட்டாயம் செய்து கொள்ள வேண்டுமா?

 • கட்டாயம் அல்ல. ஆனால் கடன் பெறும் ஒருவர் தனது விருப்பத்தோடும், தனது பாதுகாப்பிற்குமாக மட்டுமே இக்காப்புறுதிழையச் செய்தல் வேண்டும்.
  எந்த ஒர் வங்கியும் இதை கட்டாயப் படுத்துவதில்லை. எனவே இது ஓர் தன்விருப்புக் காப்புறுதியாகவே பார்க்கப்படுகின்றது.

கடன் பெறும் ஒருவர் இக்காப்புறுதியை செய்வதால் என்ன பயன்கள் உள்ளன?

இது இரண்டு வகைப்படும்

PPI VERSICHERUNG

 • விபத்து, சுகயீனம், வேலையிழப்பு, போன்ற வேளைகளில் கட்டவேண்டிய மாதக் கட்டணத்தை மாத்திரம் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு உட்பட்டு காப்புறுதி நிறுவனமே கட்டவேண்டும்.

PPI VERSICHERUNG

 • விபத்து, சுகயீனம், வேலையிழப்பு, போன்ற வேளைகளில் கட்ட வேண்டிய மாதக் கட்டணத்தை மாத்திரம் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு உட்பட்டு காப்புறுதி நிறுவனமே கட்ட வேண்டும். அத்தோடு மாதாந்தம் கட்டும் கட்டணத்தோடு காப்புறுதி செய்தவரின் மற்றய செலவிற்காக 500.00 CHF களும் கொடுக்கப்படும்.
geldrolle-2 (1)

இக்காப்புறுதிக் கட்டணத்தை அறவிடுவதற்கு என்ன தகமைகள் இருக்கவேண்டும்?

 • கடன் பெற்ற ஒருவர் கடன் பெற்ற நாளில் இருந்து மூன்று மாதங்களிற்குப் பின்னர் சுகயீனத்தாலோ, விபத்தாலோ, காப்புறுதி செய்து கொண்டவரில் தவறில்லாமல் வேலையிழந்தாலோ இக் காப்புறுதி ஒன்பது மாதங்களிற்கு காப்புறுதி செய்து கொண்டவரிற்காக வங்கிக்குக் கட்டவேண்டிய கட்டணத்தைக் கட்டவேண்டும்.
 • இப்படி இவரின் செய்து கொண்ட கால ஒப்பந்தத்திற்கேற்ப அதிகபட்சமாக அவரது வங்கிக்கடன் கட்டி முடிப்பதற்குள் 3 தடவைகள் 9 மாதங்கள் மொத்தமாக அதிகபட்சம் 27 மாதங்கள் காப்புறுதி செய்தவரின் மாதாந்தக் கட்டணத்தைக் கட்டுவதற்கு உதவிசெய்யும்.
 • வங்கிக்கடன் பெற்றவர் இறக்க நேரிட்டால் அவரது முழுத் தொகையையும் வங்கியே பொறுப்பேற்கும்.
 • இறப்பினால் ஏற்படும் நட்டத்திற்கும் காப்புறுதி நிறுவனத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
 • அத்தோடு எக்கால கட்டத்திலும் 65000.- CHF இற்கு மேடற்பட்ட தொகையை காப்புறுதி நிறுவனமோ அல்லது வங்கியோ பொறுப்பேற்காது.
 • ஒருவர் இறப்பினால் தனது 65000.- CHF இற்கு மேற்பட்ட வங்கிக்கடனைக் கட்ட இயலாது போனால் அவரது இறப்பிற்காகக் கொடுக்கப்படும் நட்டஈட்டின் ஊடாக அவரது குடும்பமே கட்டவேண்டும்.
 • 3 மாதங்களிற்குள் சுகயீனம் வேலையிழப்பு போன்ற காரணத்திற்குட்பட்டு வேலையை இழந்தால் அவரிற்காக கட்டணத்தை காப்புறுதி நிறுவனம் கொடுக்காது. அந்த நபரே அக்கட்டணத்தைக் கட்டி முடிக்க வேண்டும்.
 • வங்கிக்கடன் பெற்று 3 மாதத்தினுள் திடீர் விபத்தால் வேலையிழப்பு ஏற்பட்டால் அவரது கட்டணத்தை அவரது உடல் நிலை தொழில் செய்ய தயாராகும் வரை காப்புறுதி நிறுவனமே அவரிற்கான வங்கி மாதக் கட்டணத்தைக் கட்டவேண்டும்.
firmen1

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply