ஓய்வூதிய நிதி

PENSIONKASSE பணத்தை எடுக்கவேண்டுமா? முதலில் இதைப் படியுங்கள்.

சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர், அவர் தொழில் புரியும் பொழுது அல்லது தொழில் புரிந்த பொழுது அவரது ஊதியத்திலிருந்து ஓய்வு ஊதியத்திற்கென (PENSIONKASSE) கழிக்கப்பட்ட தொகையை, இப்பொழுது அவர் தொழில் புரிந்துகொண்டிருந்தால் அல்லது தொழில் இல்லாத சந்தர்ப்பத்திலேயோ, கட்டப்பட்ட நிறுவனத்திலிருந்து பெறுவதானால், என்ன செய்ய வேண்டும்? எந்தச் சந்தர்ப்பங்களில் அவற்றை மீள எடுக்க முடியும்? பல சந்தர்ப்பங்களில் மீள எடுக்க முடியும்

  • ஆணாக  இருந்தால் 65 வயதில்  ஓய்வு  ஊதியமாக மாதாந்தம் பெற முடியும் ( விதிவிலக்காக  63 வயதிலேயும் காரணத்தைக் காட்டி எடுக்க முடியும்) பெண்ணாக  இருந்தால் 63 வயதில்  ஓய்வு  ஊதியமாக மாதாந்தம் பெற முடியும் ( விதிவிலக்காக  61 வயதிலேயும் காரணத்தைக் காட்டி எடுக்க முடியும்)
  • நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால் அவரது கடன்கள் நிலுவைகளைப்  கட்டிய  பின்னர்  மிகுதியை  பெற்றுக்கொள்ளலாம்.
  • சுவிற்சர்லாந்தில் சொந்தத்  தொழில் செய்வதானால் அவரது  கழிக்கப்பட்ட   தொகையும் அவரது  தொழில் நிறுவனமும்  கட்டிய தொகையும் சேர்க்கப் பட்டு  அவரது  நிறுவனத்தில் அவர்  100%  தொழில் புரிந்து கொண்டிருக்கும் பொழுது  அவரது  சொந்தத் தொழிலை விரிவடையச்  செய்ய  எடுக்க முடியும்.
  • ஒரு நிறுவனத்தை தனது பெயரில் பதிவு  செய்ததன்  பிற்பாடே இத்தொகை  அவரது வங்கிக்  கணக்கிற்கு அனுப்பப்படும்.
  • சுவிற்சர்லாந்து  நாட்டில் சொந்தமாக  வீடு  வாங்குவதாகவிருக்கின்ற ஒருவர்     வாங்கவிருக்கும்  வீட்டின் பெறுமதியிலிருந்து  10% ஐ  வீட்டிற்கான முற்பணம் செலுத்த எடுக்க முடியும். ஆனால் அதற்குள்ளும்  பல சட்டமுறைகளின்  ஊடாகத்தான்  எடுக்க முடியும். அவையாவன  வீடு வாங்க விருப்பவரின்  வயதெல்லை  50 ஐத்  தாண்டியிருப்பின்  இப்பொழுது  இருக்கும் ஓய்வு   ஊதியப்  பணத்திலிருந்து   50% ஐ  மட்டுமே  எடுக்க  முடியும்.  அதுவும்  இருக்கும்  50%  தொகை  20,000 CHF  ஆக  இருத்தலும் அவசியம்.
  • அத்தோடு  5  வருடத்திற்குள்  இந்நபர்  தனது  ஓய்வு  ஊதியத்திலிருந்து எந்த விதமான  மாற்றங்களும்  செய்திருக்கக்கூடாது.
  •  இது  போன்று  பல சட்ட திட்டங்களை  அடிப்படையாக  வைத்தேதான்  இந்த  ஓய்வு  ஊதியத்தை  எடுக்க  முடியும்.
  •    இவை  மாத்திரமல்ல  மேலும்  பல  சில  சந்தர்பங்களில்  இந்த  ஓய்வு ஊதியத்தை  வெளியே  எடுக்க முடியும்.

சுவிற்கர்லாந்தில் உங்களிற்கோ அல்லது உங்கள் நிறுவனத்தில் தொழில் புரிபவர்களிற்கோ ஓய்வு ஊதியக் காப்புறுதியை செய்ய எம்மை நாடலாம்.

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply